ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏ.ஜீ.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஸ்வத் மாரிமுத்து தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இதையடுத்து, நடிகர் சிம்பு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பிரியாணி அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்தார்.அதை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், உதவியாளர்களுடன் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, “எனது பிறந்த நாளுக்கு, எனக்கும் எனது குழுவினருக்கும் பிரியாணி அனுப்பியதற்காக நன்றி, சிம்பு சார். நீங்க ரொம்ப நல்ல மனிதர்” என்று பதிவிட்டுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்துவின் இந்த பதிவிற்கு சிம்பு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். இதனால், அஸ்வத் மாரிமுத்து தற்போது இயக்கி வரும் டிராகன் படத்திற்குப் பிறகு, சிம்புவை வைத்து படம் இயக்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது.