Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இப்படியும் படம் எடுப்பாங்களா? காத்திருந்த இயக்குனரும், கதாநாயகனும் கதா நாயகியும்… #MinMini

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹலிதா ஷமிம். இவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘மின்மினி’. இந்தப் படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா இசையமைத்துள்ளார். வருகிற 9ம் தேதி இந்த படம் வெளி வருகிறது.பள்ளி நட்பை அடிப்படையாக கொண்டு தயாராகும் இந்த படத்தில் பள்ளிப் பருவ நண்பர்களாக பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் நடித்துள்ளனர். பள்ளி பருவகாலம் முடிந்து வாலிப வயது அடைந்ததும் நண்பனுக்காக இவர்கள் இருவரும் செல்லும் ஒரு பயணமே படத்தின் கதை.2016 ஆம் ஆண்டு துவங்கும் இந்த கதை 2024ம் ஆண்டு முடிவடைகிறது. பிரவீன் கிஷோர், எஸ்தர் அனில் இருவரும் 8 வருடங்கள் காத்திருந்து பின்னர் தங்கள் வாலிப வயது கேரக்டரில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முதலாக இப்படியான ஒரு காத்திருப்பு நடந்ததில்லை என்கிறார்கள்.



- Advertisement -

Read more

Local News