Tuesday, July 2, 2024

இனி ‘நோ’ சொல்ல முடியாது… உலகநாயகனிடம் முன்கூட்டிய உத்திரவாதம் வாங்கிய கல்கி படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கல்கி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடும் பணிகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். 

சமீபத்தில் கல்கி படத்தில் முக்கிய அங்கமாக விளங்கும் புஜ்ஜி என்ற கார் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த கார் தற்போது மக்களின் பார்வைக்காக தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது.முதலில் இந்த கல்கி படத்தை 2024 மே 9 அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர், ஆனால் VFX வேலைகள் காரணமாக வெளியீடு ஜூன் 27க்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் கமல் ஹீரோ கதாபாத்திரத்தில் இருந்து விலகி, இதில் வில்லனாக நடித்துள்ளார்.

கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமலின் ரோல் மிகச் சுருக்கமானதாக இருக்கும் எனவும், இரண்டாம் பாகத்தில் தான் அவரது கதாபாத்திரம் முழுமையாக வெளிப்படும் என கூறப்படுகிறது. அதனால், இரண்டு பாகங்களுக்கும் சேர்ந்து அவருக்கு சம்பளம் மற்றும் கால்ஷீட் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாம். கமல் மிக பிஸியான நடிகர் என்பதால் முன்கூட்டியே கல்கி இரண்டாம் பாகத்திற்கான ஒப்பந்தமும் இப்போதே நடந்துள்ளது என சொல்லப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News