Tuesday, September 17, 2024

இந்த படம் இதுக்குதான் ட்ராப் ஆச்சா? சிம்புவும் செல்வராகவனும் செய்த காரியம்… கடுப்பான தயாரிப்பாளர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநரான செல்வராகவன், தற்போது தனது அடுத்த படமாக ஆயிரத்தில் ஒருவன் 2 உட்பட பல படங்களை இயக்கத் தயாராகி வருகிறார். அதேநேரத்தில், சிம்பு தக் லைஃப் படத்தில் பிஸியாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த கான் திரைப்படம் திடீரென கைவிடப்பட்டதற்கான காரணம் பற்றிய செய்திகள் உலவுகின்றன.சில காலங்களுக்கு முன்பு, செல்வராகவன் மற்றும் சிம்பு கான் என்ற படத்தில் இணைந்து பணியாற்றவிருந்தனர், இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. எனினும், சில காரணங்களினால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இப்போது, கான் திரைப்படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியானது.

ஷூட்டிங் தொடங்கிய முதல் இரண்டு நாட்களும் சிம்பு வரவில்லை எனவும், பின்னர் அவர் வந்தபோது செல்வராகவன் வராததால், தயாரிப்பாளர் இதனை பார்த்து கடுப்பாகி இந்தப் படம் வேண்டாம் என முடிவெடுத்து வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News