Saturday, September 14, 2024

இந்த தடவ ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு… பிக்பாஸ் 8வது சீசன் ப்ரோமோவில் அசத்தும் விஜய் சேதுபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது, அதற்கான டீசரும் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், இதுவரை எந்த சீசனிலும் நடக்காத வகையில், பிக் பாஸ் – 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சியை மக்களால் வெளியிடப்படும் என விஜய் டிவி அறிவித்தது.

அதன்படி, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ சென்னை பெசன்ட் நகரில் மக்களால் வெளியிடப்பட்டு, இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் லோகோ ரசிகர்களால் அதிகம் வரவேற்பைப் பெற்றது. இந்த சீசனுக்கான பிக்பாஸ் ஐ லோகோவும் முன்னோட்டக் காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிக்பாஸ் ப்ரோமோவில் பேசும் வசனங்களும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News