Tuesday, August 13, 2024

இந்த கேள்வி கேப்பீங்கனு தெரிஞ்சு தான் Prepared-ஆ வந்திருக்கேன் – ஹெல்மெட் விவகாரம் குறித்து விளக்கம் கொடுத்த நடிகர் பிரசாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். யூடியூப்பை சேர்ந்த ஆங்கர் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி பேட்டியளித்தார். இந்த பேட்டி யூடியூப்பில் வெளியாகி வைரலானது. பிரசாந்த் அவருடைய தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வருகிற ஆகஸ்ட் 9ல் வெளியாகிறது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளில் பிஸியாக வலம் வருகிறார் பிரசாந்த்.

இந்நிலையில் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிகொண்டு பேட்டி அளித்த வீடியோ வெளியாகி அவருக்கு எதிராக வைரலானது. மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததற்காக பிரசாந்துக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இளம்பெண்ணுக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. பிரசாந்த் தனது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய புகைப்படத்தையும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரசாந்த் கூறியதாவது:கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். தமிழ்நாடு முழுக்க இலவசமாக ஹெல்மெட் வழங்கியுள்ளேன். நாகர்கோவில், திருச்சி, மதுரையில் ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். பாதுகாப்பாக ஓட்டுங்கள், நிதானமாக ஓட்டுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தயவுசெய்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்கள். அது எனக்கில்லை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் முக்கியம். நீங்கள் வெளியே செல்லும்போது 5 நிமிடம் முன்பே கிளம்புங்கள். அவசரமாக வண்டி ஓட்டாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஹெல்மெட் போட்டு ஓட்டுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News