Tuesday, July 2, 2024

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் இல்லை… முக்கியமான அப்டேட் சொன்ன ஷங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக ஆறு மாத இடைவெளிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என்று ரிலீசாகவுள்ள சூழலில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் குறித்து இயக்குனர் சங்கர் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இந்தப் படத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பான காஸ்டியூமுடன் காஜல் அகர்வால் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காஜல் அகர்வால் இந்தியன் 3 படத்தில் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் தான் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் நடிகர் கமலுக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவில்லை என்ற உண்மையை தற்போது ஷங்கர் வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News