Saturday, September 14, 2024

இந்தளவு மனிதாபிமானம் மிக்க படத்தை சமீபத்தில் நான் பார்க்கவில்லை… கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் நடிகர் ஏகனை பாராட்டிய இயக்குனர் பார்த்திபன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிக அழகாக படமாக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவரது மனிதன் படத்தை தொடர்ந்து, சீனு ராமசாமி அடுத்ததாக “கோழிப்பண்னை செல்லதுரை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, பிரிகிடா சகா மற்றும் ஏகன் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை என்.ஆர் ரகுநாதன் அமைத்துள்ளார். இப்படத்தை “ஜோ” படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த பார்த்திபன், இயக்குனர் சீனு ராமசாமிக்கும், படத்தில் நடித்த ஏகனுக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியதாவது, “சமீபத்தில் நான் இந்தளவு மனித நேயம் நிறைந்த படத்தை பார்த்ததில்லை. ஏகனின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆல் தி பெஸ்ட், ஏகன்! இதை மேலும் பற்றி பேசினால் நான் உணர்ச்சிவசப்படிவிடுவேன்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News