Saturday, September 14, 2024

இது என்னோட மியூசிக் தானா… அந்தகன் தீம் பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் போட்ட ட்வீட்… ஷாக்கான ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் முதல் பாடலான ‘அந்தகன் ஆன்தம்’ பாடல் புதன்கிழமை வெளியானது. ஆனால், தான் இசையமைத்த ‘அந்தகன் ஆன்தம்’ பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், சோனி மியூசிக் வெளியிட்டுள்ள ‘அந்தகன் ஆன்தம்’ பாடலின் லிங்கை மேற்கொள் காட்டி, “வரலாற்றில் முதன்முறையாக, ஆடியோ லேபிளும் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இது என்னுடைய பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை” என கிண்டலாக பதிவிட்டு, அதற்கு வடிவேல் ரியாக்‌ஷனையும் சேர்த்துள்ளார். அதற்கு அடுத்த பதிவில், “இது நான் வழங்கிய இசையோ, மிக்சிங்கோ, அரேஜ்மென்டோ அல்ல” என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டனவா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இதில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News