Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

குழந்தைகளுக்காக கோவப்பட்ட நயன்தாரா….தீயாக பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

திருமணத்திற்கு பிறகும் நயன்தாரா தொடர்ந்து நடிப்பில் பிஸியாக உள்ளார். ஹிந்தியில் “ஜவான்”, தமிழில் “அன்னபூரணி” ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார். இந்த இரண்டு படங்களில் “ஜவான்” ப்ளாக் பஸ்டர் வெற்றிபெற்றது. “அன்னபூரணி” அவரது 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக “மண்ணாங்கட்டி” படத்தில் நடித்துள்ளார். இந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும், அவர் தனது குழந்தைகளுடன் தவறாமல் நேரம் செலவழிக்கிறார்.சமீபத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் ஹாங்காங் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது குழந்தைகளே தன் உயிர், உலகம் என வாழ்ந்து வருகிறார்.

நயன்தாரா தற்போது சென்னை எழும்பூரில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கிறார். மாலை நேரங்களில் தனது குழந்தைகளை விளையாட அழைத்துவருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒருமுறை, ஒரு டெலிவரி பாய் டெலிவரி செய்ய வேண்டியவரிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது, நயன்தாரா அவரிடம் “என்ன குழந்தைகள் விளையாடுறாங்க, இப்படி சத்தமா பேசிட்டு இருக்கீங்க” என கத்தியதாகவும், மேலும் ஒரு முறை ஆட்டோக்காரர் ஒருவர் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தபோது, “ஹலோ, குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், ஏன் இவ்வளவு வேகமாக வரீங்க?” என வாதமிட்டதாக தகவல்கள் பரவுகின்றன.

- Advertisement -

Read more

Local News