Tuesday, November 19, 2024

ஆகஸ்ட் 2ல் இசைவெளியீட்டு விழா… ரிலீஸ்க்கு தயாராகிய விக்ரமின் ‘தங்கலான்’ #Thangalaan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் ஆங்கிலேய இந்தியர் காலத்தினை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் லைவ் ஸ்வுண்ட் முறையை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல், இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படக்குழுவினர் மும்பை, கொச்சி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபடவுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News