Saturday, September 14, 2024

அல்லு அர்ஜூன்-கும் புஷ்பா 2 இயக்குனருக்கும் மோதலா? தீயாய் உலாவும் தகவல்! #PUSHPA2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம் “புஷ்பா”. இந்தப் படம் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்தப் படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

புஷ்பா 2 திரைப்படம் இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியுள்ளது. இப்போது அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகப் பொருட்செலவில், அதிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.ஆகஸ்ட் மாதம் வெளியாவதாக இருந்த படம் டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்குக் காரணம் இயக்குனர் சுகுமாரின் ஒரு முடிவுதான். பல கோடி ரூபாய் செலவில் எடுத்த சில காட்சிகள் தனக்குப் பிடிக்காததால், அவற்றை மீண்டும் ஷூட் செய்யவேண்டும் என அவர் முடிவெடுத்துள்ளார்.

இதனால் சுகுமாருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது தாடியை ட்ரிம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் படப்பிடிப்பு குறித்து திட்டமிடும் போது அல்லு அர்ஜுன் டூர் செல்வதும், அதேபோல் அல்லு அர்ஜுன் வரும்போது இயக்குனர் டூர் செல்வதும் என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் உலாவருகின்றன. இதனால் ஷூட்டிங் தாமதமாகி, “புஷ்பா 2” திரைப்படம் சொன்னபடி கண்டிப்பாக டிசம்பர் 4ல் ரிலீஸாகுமா ஏக்கத்தில் காத்திருக்கின்றார் ரசிகர்கள்.

- Advertisement -

Read more

Local News