நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான பின் அப்படத்திலிருந்து விலகினார். தற்போது, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. மேலும், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஆனால், சில காரணங்களால் இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.