Tuesday, November 19, 2024

அந்த மாதிரியான வார்த்தைகள் கதாபாத்திரத்தை ஆழமாக பதிய வைக்க தான் – கமல்ஹாசன்! #INDIAN 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர் கமல் ஹாசன், நடிகர் சித்தார்த், இயக்குநர் ஷங்கர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கமல் ஹாசன், “ஒரு வேலைக்கு புறப்படும்போது பல தடங்கல்கள் வரும். இப்படியொரு படத்திற்கும் பிரச்சினைகள் இருந்தன. முந்தைய நாள் எங்களுடன் நன்றாக பேசியவர்கள் அடுத்த நாள் இல்லை. இப்படியான உயிரிழப்புகள் நடந்தன. இந்த படத்தில் இயக்குநர் சிங்காரத்திற்காக எதையும் சேர்க்கவில்லை. நடிகர்களுக்காக எதையும் செய்யமாட்டார்; கதைக்கு பொருத்தமாகவே செய்வார்,” எனக் கூறினார். பின்னர், இந்த தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல், “இந்த இரண்டாம் தலைமுறை என்னைவிட அதிகமாக கனவு காண்பவர்கள். நான் சிறுவயதில் என் வீட்டின் பின்னால் இருந்த கே.பி. சுந்தராம்பாள் அம்மாவிடம் ‘பழம் நீ அப்பா’ பாடலை பாடி காட்டியிருக்கிறேன். இந்த படத்துக்கு மிக பெரிய செட் போட்டார்கள். முதல் நாள் செட்டுக்கு சென்றபோது, அதை ரசிக்க விடாமல் எனக்கு முழு இந்தியன் தாத்தா மேக்கப் போட்டுவிட்டார்கள்,” எனக் கூறினார். பின்னர், சித்தார்த், “ஒரு மேடையில் நீங்கள் இந்தியன் 3-ம் பாகத்தின் ரசிகர் என்று கூறியது தவறாக புரிந்துக்கொண்டார்கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு கமல், “அந்த விஷயத்தால் ஷங்கர் ‘என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க’ என்று கேட்க வைத்தார். இந்த விஷயம் அம்மா, அப்பா பிடித்த மாதிரிதான். ஒரு படத்தில் ஒரு காட்சி பிடித்தால், மற்ற காட்சிகள் பிடிக்கவில்லை என கிடையாது. இந்தியன் 3 படத்தை நானே எடுக்க சொன்னேன். அது உருவாகிவிட்டது. எனக்கு அதை மேலே ஆர்வம் வந்தது. சம்பார், ரசம் நல்லா இருந்தாலும், என் மனசு பாயாசத்துக்கு அலைபாயுது. அதேபோல், எனக்கு பிடித்த விஷயங்கள் இந்தியன் 3-இலும் உள்ளன,” என்றார்.

சென்சார் போர்ட் குறித்த கேள்விக்கு, இயக்குநர் ஷங்கர், “சென்சார் போர்ட் படத்தில் வரும் தவறான வார்த்தைகளை மியூட் செய்தது குறித்து கூறினார்.” கமல் ஹாசன், “நான் சிறுவயதில் தவறான வார்த்தைகள் வைத்து கவிதை எழுதியேன். இது என் தகப்பனிடம் போய் சேர்ந்தது. அவர், ‘நீ டாக்டருக்கு படி, அப்போதான் அந்த வார்த்தைகள் உனக்கு பாடமாகும்’ என்றார். உறுப்புகள் பெயர்தான் தவறான வார்த்தைகள். ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் கதாபாத்திரங்களை ஆழமாக பதிவு செய்ய இந்த தவறான வார்த்தைகள் பயன்பட்டன,” என்றார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த இயக்குநர் ஷங்கர், “முதலில் இந்த சேனாபதி கதாபாத்திரத்துக்காக கலை இயக்குநர் தோட்டா தரணியிடம் ஒரு ஸ்கெட்ச் கேட்டேன். அந்த சமயத்தில் அவர் மேக்கப் போட்டுக்கொண்டு வரும்போது இருந்த அதே சிலிர்ப்பு இந்தியன் 2 சமயத்திலும் வந்தது. எனக்கு இந்தியன் தாத்தாதான் செட்டில் இருப்பார் என்று தோன்றும். சென்சார் போர்ட்டில் நான் சில காட்சிகளை கட் பண்ணினால் அதனுடைய உணர்வு போயிடும் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘படம் நல்லா வந்திருக்கிறது, குடும்பத்தோடு பார்ப்பார்கள்’ என்றனர். நான் முதல் பாகம் பண்ணும்போது இரண்டாம் பாகம் பண்ணுவேன்னு யோசிக்கல. முதல் பாகத்தின் ஒரு காட்சியில் வயதை காட்டினோம். இப்போ இந்தியன் 2 இவ்வளவு வருடம் கழித்து பண்ணுவேன்னு நினைக்கல.

இப்போ இதை வைத்து பல கேள்விகள் வருது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் ஒருவருக்கு 118 வயசு. அவர் அந்த கலையில் கிராண்ட் மாஸ்டர். அதேபோல் சேனாபதியும். முதல் பாகம் போல இல்லாமல் ப்ராஸ்தெடிக் மேக்கப் நல்லா வந்துருக்கு. பலரும் பழைய இந்தியன் தாத்தா மாதிரி இல்லைனு சொன்னாங்க. முதல் பாகத்தில் மேக்கப் அதிகமாக இருந்ததால் நடிகரை பெரிதாக பார்க்க முடியவில்லை. இந்த படத்தில் நான் நடிகரை அதிகமாக பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டேன். இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள், கேமியோக்கள் இருக்கு. குடும்பங்களுக்கான பல விஷயங்கள் இந்த படத்தில் இருக்கு. கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணனுடைய காமன் மேன் கார்ட்டூனை கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தியிருக்கோம்,” என்றார்.

- Advertisement -

Read more

Local News