வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து “GOAT” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தயாராகியுள்ள இப்படம், தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு “GOAT” படத்தை பற்றி விளக்கம் அளித்துள்ளார். மங்காத்தா படத்திற்கும் “GOAT” படத்திற்கும் உள்ள வித்யாசத்தை பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “நான் Trailer-லேயே “GOAT” படம் எப்படியானது என்று சொல்லியுள்ளேன். ஆனால் யாரும் சரியாக இன்னும் கணிக்கவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதையும் யாரும் கணிக்க முடியாது என நான் சவால் விடுகிறேன். இப்படத்தின் காட்சிகள் வேகமாக நகரும். எந்த இடத்திலும் நான் எமோஷன்களை டச் செய்யவில்லை. ஒரு ஃபேமிலி மேனின் வாழ்க்கையில் நடந்த ஒரு பகுதி தான் இந்த “GOAT” திரைப்படம்,” என இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். “GOAT” படம் மங்காத்தா மாதிரியான ஒரு படமாக இருக்கும்,” என அவர் கூறியுள்ளார்.