மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விடாமுயற்சி. கடந்த சில தினங்களாக படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை விடாமுயற்சி டீம் குஷிப்படுத்தியது.இதனிடையே அசர்பைஜானில் விடாமுயற்சி சூட்டிங்கில் பங்கேற்றிருந்த அஜித்திற்கு அந்நாட்டை சேர்ந்த இளம் ரசிகர் ஒருவர் அஜித்தின் புகைப்படத்தை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். இந்த பரிசால் நெகிழ்ச்சியடைந்துள்ள அஜித், அந்த ரசிகருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000041920.jpg)