தென்னிந்திய மொழிகளில் முன்னனி இசையமைப்பாளர் ஆக வலம் வருபவர் டிஎஸ்பி என்றழைக்கப்படும் தேவிஸ்ரீ பிரசாந்த். குறிப்பாக பல முன்னணி நடிகர்களின் பான் இந்திய படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் வேணு இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘ எல்லம்மா’ எனும் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நானி, நிதின், சர்வானந்த் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் இப்போது இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.