தனது பயணத்தை விஜே-வாக தொடங்கியவர் சித்து எனும் விஜே சித்து, இதனைத்தொடர்ந்து யூடியூப் தளத்தில் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் படத்தில், அவர் நண்பராக நடித்திருந்தார். சித்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது, இவரது புதிய திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தை சித்து தானே இயக்கவுள்ளார் என்றும், அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு டயங்கரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் படத்தை தொடங்கும் விதத்தை, தயாரிப்பாளர் ஐசரி கணேஷை வைத்து தங்களுக்கே உரிய பாணியில் ஒரு காமெடி புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.