தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. மர்மர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மர்மர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்று வருகிறது.இப்படத்தின் வெற்றி விழாவில் மர்மர் திரைப்படத்தின் விநியோகஸ்தர் குகன் கூறும் போது, “தற்போது புதிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் வருகிறார்கள் எனில், தமிழ்நாட்டில் தமிழ் படங்களின் வெற்றி சதவீதம் 5 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கிறது.””வருடத்திற்கு 250 திரைப்படங்கள் வரும் பட்சத்தில் அவை அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. இதில் மாதம் ஒரு படம் தான் வெற்றி பெறுகிறது. ஒரு படம் கணக்கெடுக்கும் போது 4 முதல் 6 சதவீத படங்கள் தான் பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியாக இருக்கும். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என்று பார்த்தால் வெறும் 4 முதல் 6 சதவீதமாகத் தான் இருக்கும்,” என்று தெரிவித்தார்.
