விஜய்யின் 68வது படமான ‘தி கோட்’ அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியிடப்பட உள்ளது. விஜய் ஒருபடத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன், சில வாரங்களுக்குள் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்குவார். இதுவரை, அவரது அடுத்த மற்றும் கடைசி படமான விஜய் 69 பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், சில நிறுவனங்களின் பெயர்கள் இந்த படத்தை தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. எச். வினோத் இந்தப் படத்தை இயக்கப் போவார் என்று மட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ‘பிரேமலு’ படத்தின் நாயகி மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘தி கோட்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்து, விரைவில் முடித்து, 2026ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்காக தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கான திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.