Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

லண்டனில் கடைசி உலகப்போர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ வெளியிட்டு அசத்திய நடிகர் ஹிப் ஹாப் ஆதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் படம் கடைசி உலகப்போர். இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை டாப் ஹீரோக்களின் பாணியில் லண்டனில் வெளியிட்டுள்ளார் ஆதி. லண்டனில் புகழ்பெற்ற ஓவோ அரேனா வெம்பிலி அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் இது வெளியிடப்பட்டது. அங்கு நடந்த தனது இசை கச்சேரியின் நடுவில் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு இடையில் தனது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இந்த அரங்கில் ஒரு தமிழ் படத்தின் போஸ்டர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News