Tuesday, November 19, 2024

ராயனுக்கு கிடைத்த ராயலான பரிசு ! #RAAYAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் இயக்கி, நடித்து சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் ராயன். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ராயன், தனுஷின் 50 ஆவது படமாகும். இந்த படம் வெளியான பின் மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில், தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை தனுஷ் நடித்த படங்களைவிட, ராயன் மிகுந்த வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த படம் வெளியான ஒரு வாரத்தில் 116 கோடி ரூபாய் வசூலித்தது என்று கூறப்படுகிறது. இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ராயன் முதன்மையானதாக இருக்கிறது.இப்படம் நாளை ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான தனுஷை அழைத்து, ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இரண்டு காசோலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News