Tuesday, November 19, 2024

ரஜினி சார்க்கு நான் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ரொம்ப பிடிக்கும்… அதனால் இரண்டு வாய்ப்பு கொடுத்தாரு – பா.ரஞ்சித் டாக்! #Thangalaan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் பா. ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் படம் உருவாகியுள்ளது. வரும் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய பா.ரஞ்சித், ரஜினிக்கு தனது அரசியல் பிடிக்கும் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,’ஒரு சொல்லப்படாத கதையை கொண்டாட்டத்தின் மூலம் சொல்லும்போது பார்வையாளர்களுடன் நம்மால் சுலபமாக நெருங்கமுடியும் என்பதை ‘சென்னை 28’ மூலம் தெரிந்துகொண்டேன். அப்படிதான் ‘அட்டகத்தி’ உருவானது.

நான் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் ரஜினி சாருக்கு ரொம்ப பிடிக்கும். மெட்ராஸ் பிடித்ததால்தான் கபாலி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அவர் வழங்கினார். என்னுடைய அரசியல் அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘கபாலி’ வெற்றியடைந்த பின் ‘காலா’ வாய்ப்பு கொடுத்தார் என்று அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News