Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரசிகர்களை ஆட்டம் போட வைக்க காத்திருக்கும் தி கோட் படத்தின் மூன்றாவது பாடல்… அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படக்குழு! #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து உருவாக்கி வரும் படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், அடுத்த பாடலுக்கான அப்டேட் நேற்று மாலை வெளியானது.

அதன்படி, கோட் படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ இன்று (ஆகஸ்ட் 2) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் நாளை வெளியாவதாகும், முதற்கட்டமாக ப்ரோமோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News