Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரசிகர்களுக்கு மிகப்பெரிய கோரிக்கையை வைத்த எஸ்.ஜே.சூர்யா… #INDIAN 2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியன் 2 படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் மும்பை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் என இந்தியன் 2 புரமோஷனில் பிசியாகி இருக்கின்றனர். வரும் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாகிறது.

இன்னும் சில வாரங்களில் இந்தியன் 2 படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து 1000 கோடி ரூபாய் வசூல் படமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை இந்தியன் 2 படத்துக்காக புரமோஷன் செய்த போது வைத்திருக்கிறார். 

எஸ்.ஜே சூர்யா பேசியபோது இந்தியன் 2ல் நான் சில காட்சிகள் மட்டுமே வருகிறேன் என்றும் இந்தியன் 3ல் எனக்கும் கமல் சார் அவர்களுக்கும் ஒரு சூப்பர் சீன் இருக்கு. என்ன இங்க வாடான்னு கூப்பிடணும், அவ்ளோதான் சீன்..‌. ஆனா அந்த சீனை விரலில் சொடக்குப் போட்டு எப்படி கூப்பிடுகிறார் என பார்க்க இந்தியன் 3 வரை காத்திருங்க என எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளது படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News