Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘ஜோ’ பட ஜோடியின் ‘ஆண்பாவம் பொல்லாதது’!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். ரியோ ராஜ் நாயகனாகவும், மாளவிகா மனோஜ் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷீலா ராஜ்குமார், விக்னேஷ்காந்த், ஏ. வெங்கடேஷ், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் கடந்த 31-ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் குறித்து இயக்குனர் கலையரசன் தங்கவேல் கூறுகையில், “கணவன்-மனைவி இடையேயான ஈகோ பிரச்சனை விவாகரத்து வரை செல்லும் நிலையில், நீதிமன்றத்தில் யாருடைய ஈகோ வென்றது? விவாகரத்து எப்படியானது? என்பதை நகைச்சுவையாகச் சொல்லும் கதை இது,” என்றார்.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பதாகவும், அவர்களின் நடிப்புக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டுகள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். “யாருப்பா நீ எங்கள் மனசுக்குள்ள உள்ளதை அப்படியே போட்டு உடைக்கிறாயே…” என ரியோவின் நடிப்பை ஆண்கள் தரப்பில் பாராட்டுகிறார்கள்; அதேபோல் பெண்கள் தரப்பும் இப்படத்தை பெண்ணியம் பேசும் கண்ணோட்டத்தில் கொண்டாடுகிறார்கள். படம் முழுக்க கலகலப்பாக இருப்பதாக பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.

ஷீலா ராஜ்குமார், விக்னேஷ்காந்த், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்து குமாரின் இசை ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளன. “நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அங்கீகாரம் தராமல் இருப்பது இல்லை. அந்த வகையில் எங்கள் படத்தையும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு இதயம் கனிந்த நன்றி,” என இயக்குனர் கலையரசன் தங்கவேல் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News