காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது சூரி கதையின் நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் ஹோட்டலை தொடங்கினார். முழுக்க முழுக்க சைவ சாப்பாடு அங்கு விநியோகிக்கப்படுகிறது. குறைந்த விலையில் தரமாக அந்த உணவு வழங்கப்படுவதாக அங்கு சாப்பிட்டவர்கள் சொல்வதுண்டு. அடுத்த ஹோட்டல்: இந்நிலையில் சூரி புதிதாக இன்னொரு ஹோட்டலை தொடங்கியிருக்கிறார். அதன்படி மதுரையில் இருக்கும் திருநகரில் அந்த ஹோட்டலை திறந்திருக்கிறார். அந்த ஹோட்டலை சூரியே ரிப்பன் வெட்டி இன்று திறந்துவைத்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more