Monday, November 18, 2024

மின்னல் முரளி 2 உருவாகுமா? டோவினோ தாமஸ் சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த “மாரி 2” படத்தில் வில்லனாக நடித்தவர். அண்மையில் அவர் நடித்த “2018”, “அன்வேஷிப்பின் கண்டேத்தும்” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்தன. அதேபோல், நடிகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 5 மொழிகளில், பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ சூப்பர் ஹீரோவாக நடித்த “மின்னல் முரளி” படம் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கொரோனா காரணமாக நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியான இப்படம், 2021 ஆம் ஆண்டின் சிறந்த மலையாள திரைப்படங்களின் ஐஎம்டிபி வரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. அதன்பிறகு அவர் மலையாள படங்களில் நடிக்க அதன் மொழியை கற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ப்ரூஸ் லீ கதாபாத்திரத்தில் நடித்த பெமின ஜார்ஜின் நடிப்பும் இப்படத்தில் கவனம் ஈர்த்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த டோவினோ தாமஸ் நேர்காணலில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இயக்குநர் பாசில் ஜோசப்பை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறேன். அவர் விரைவில் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஆனால், அது ‘மின்னல் முரளி’ படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. ‘மின்னல் முரளி’ படத்தின் முதல் பாகத்துக்கான திரைக்கதை மிகவும் இயல்பாக அமைந்தது, அதுதான் படத்தின் வெற்றி. அதனால், இரண்டாம் பாகத்துக்கு நாம் எதையும் பலவந்தமாக முயற்சிக்கவில்லை. அது தேவைப்பட்டால் நிச்சயமாக நடக்கும் காத்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News