மலையாள திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்குபவர் ஜீத்து ஜோசப். இவர் 2010 ஆம் ஆண்டு ‘மம்மி & மீ’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய ‘நேரு’ திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இயக்குநர் ஜீத்து ஜோசப் ‘மிராஜ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர். முன்னதாக ‘கூமன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஜீத்து ஜோசப் மற்றும் ஆசிப் அலி இணைந்துள்ளனர். அதேபோல, அபர்ணா பாலமுரளியும் நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்துக்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைத்துள்ளார். ‘மிராஜ்’ படத்தின் திரைக்கதை, ஜீத்து ஜோசப் மற்றும் ஸ்ரீநிவாஸ் அப்ரோல் இணைந்து எழுதியுள்ளனர். E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே, இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.