லாவண்யா திரிபாதி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளதுடன், தமிழிலும் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். ‘பிரம்மன்’ திரைப்படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, ‘மாயவன்’ மற்றும் ‘தணல்’ ஆகிய படங்களில் நடித்தார். 2023-ம் ஆண்டு, லாவண்யா திரிபாதியும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும், நடிகருமான வருண் தேஜும் திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில், லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தாதினேனி சத்யா இயக்க, ‘சதிலீலாவதி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், ‘சகுந்தலம்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.



இதனிடையே, ‘சதிலீலாவதி’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதனுடன் தொடர்புடைய படப்பிடிப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.