Tuesday, November 19, 2024

பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கும் பணி தீவிரம்… விரைவில் தொடங்கவுள்ள கூலி படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டாரின் 170வது படமாக ‘வேட்டையன்’ உருவாகியுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இதில் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங், துஷாரா, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினியுடன் 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்குப் பிறகு, ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். லோகேஷின் ஆஸ்தான அனிருத், அன்பறிவ் கூட்டணி இதிலும் உள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் செம வைரலானது. அதில் ரஜினி ஆர்.எக்ஸ் 100 பைக் சத்தத்துடன் கொள்ளையர்களின் கூடாரத்திற்கு வருவது மற்றும் ஷட்டரை உடைத்து வந்ததைப் பார்க்க முடியும். வின்டேஜ் ரஜினியின் புகழ்பெற்ற, ‘சோறு உண்டு, சுகம் உண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றால் சொர்க்கத்தில் இடமுண்டு போடா’ என்ற வசனமும் இடம்பெற்றது.

இந்தப் படத்தில் வில்லனாக சத்யராஜ் கமிட்டானாலும், பாலிவுட் வில்லன் ஒருவரும் இணையலாம் என்று பேசப்படுகிறது. ரஜினியுடன் முதன்முறையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தமிழில் ‘லாபம்’ படத்திற்குப் பிறகு தெலுங்கு பக்கம் சென்ற ஸ்ருதி, தனது இரண்டாவது இன்னிங்ஸை லோகேஷின் படத்தில் தொடங்குகிறார். இதர நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது. லோகேஷ், விஜய்யின் ‘லியோ’ படத்தில் காஷ்மீரில் பிரமாண்ட அரங்கம் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியுள்ளார். அதேபோல ‘கூலி’ படத்திற்காகவும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

சென்னையிலும், ஹைதராபாத்திலும் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை இரண்டாவது வாரத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அன்பறிவ்வின் அதிரடி ஆக்‌ஷனில் ஃபைட் சீனோடு படப்பிடிப்பு தொடங்கும் எனப் பேசப்படுகிறது. ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையில் எண்ணூர் பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு சீறிப்பாயும் எனக் கூறப்படுகிறது. படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News