பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தெலுங்கு சினிமாவுக்கு சென்ற பிறகு தான் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் “ஆட்டமா தோரோட்டமா” பாடலுக்கு நடனம் ஆடியார். முதலில் அவர் இதற்கு மறுத்திருந்தார். ஆனால், படத்தின் முழுக் கதையையும் கூறிய பிறகுதான் அந்த பாடலுக்கு ஆட சம்மதித்தார். பாடல் பெரிய ஹிட்டானது.

ஹீரோயினாக மட்டுமன்றி, அம்மன் கதாபாத்திரத்தில் கூட அழைக்கப்படும் அளவுக்கு அவரின் முகத்தில் தெய்வீக கலைத் தோற்றம் காணப்பட்டார் ரம்யா கிருஷ்ணன். ரஜினிகாந்துடன் இணைந்து ‘படையப்பா’ திரைப்படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் அவரது திரையுலக திருப்பத்திற்கு முக்கியமான ஒன்று.

கே.எஸ். ரவிக்குமார் இந்த கதையை ரஜினிகாந்திடம் சொல்லி, நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். ‘படையப்பா’ படத்தில் வில்லியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணன், ‘பாகுபலி’ படத்தில் சிவகாமி தேவியாக அசத்தினார். அந்த படத்தில் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர்.


சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 53 வயதில் இவ்வளவு அழகா என்று கேட்கும் ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.