Tuesday, November 19, 2024

நான் யாருன்னு எனக்கு தெரியும், என்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும்… விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்! #Raayan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர் ரஹ்மான், துஷரா, காளிதாஸ் ஜெயராம், அபர்னா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இசை வெளியீட்டு விழாவில் பலர் ராயன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். “தனுஷ் அவர்களது இன்ஸிபிரேஷன் எனவும், அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம்” என நடிகர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அதில், அவர் ஏன் போயஸ் கார்டனில் வீடு வாங்கினார் என்ற காரணத்தை கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்களுக்கு விவாகரத்து ஆனாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்கிற அளவுக்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், “நான் யாருன்னு எனக்கு தெரியும், என்னை படைச்ச அந்த சிவனுக்குத் தெரியும், என் அப்பா, அம்மாவுக்குத் தெரியும், என் பசங்களுக்குத் தெரியும், என் ரசிகர்களுக்குத் தெரியும்” என பேசி, தனுஷ் அவரை பற்றி தவறான விமர்சனம் வைக்கும் பல நபர்களின் வாயை அடைத்துள்ளார். தனுஷ் பேசிய இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News