Tuesday, November 19, 2024

நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருக்கு – இயக்குனர் பாக்கியராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேலுார் மாவட்டம், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள் நல்ல படியாக படிப்பை முடித்துள்ளீர்கள். ஆனால், நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும், சினிமாவில் ஏதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர், டாக்டர் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும், சேவை மனப்பான்மையுடனும், மக்களுக்கு சேவை செய்யும் பணி. இதை சிறப்பாக செய்து வெற்றி பெற வேண்டும் இவ்வாறு பேசினார்.

Actor Director K Bhagyaraj at the Sathuranga Vettai Audio Launch
- Advertisement -

Read more

Local News