Tuesday, December 31, 2024

நான் அவர்களை அடித்தேனா? இயக்குனர் பாலா சொன்ன விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலா இயக்கிய ‘வணங்கான்’ படம் வருகிற 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். ஆரம்பத்தில், சூர்யா, கிரித்தி செட்டி, மமிதா பைஜு ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் சூர்யாவும் கிரித்தி செட்டியும் விலகி விட்டனர் மமிதா பைஜுவும் விலகினார்.

இதுகுறித்து பின்னர் மமிதா கூறுகையில், ‘வணங்கான்’ படத்தில் இருந்து என்னை யாரும் விலக்கவில்லை, நான் தான் விலகினேன். படப்பிடிப்பு தளங்களில் பாலா கடுமையாக நடந்து கொண்டார். ஒருமுறை சரியாக நடிக்கவில்லை என்று கூறி முதுகில் அடித்தார். அவருடன் வேலை செய்ய முடியாது என்பதால் நடிகை மமிதா பைஜூ விலகியதாக செய்திகள் வெளியாகின.

இந்த குற்றச்சாட்டுக்கு பாலா இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் தற்போது, ‘வணங்கான்’ குறித்து பேசும் போது, பாலா மமிதாவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். ‘மமிதா நடிக்க வேண்டிய கேரக்டருக்கு மேக்கப் தேவையில்லை. ஆனால் ஒரு நாள் அவர் அதிக மேக்கப்புடன் படப்பிடிப்புக்கு வந்தார். ஏன் இவ்வளவு மேக்கப் போட்டு வந்தாய் என்று கேட்க அடிப்பதுபோல கை ஓங்கினேன். ஆனால் அடிக்கவில்லை. பின்னர் தெரிந்தது, அவருடைய மேக்கப் ஆர்டிஸ்ட் மும்பையைச் சேர்ந்தவர்; அவருக்கு கதையையும் கேரக்டரையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிட்டது,’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News