தமிழ் திரையுலகில் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன் பிறகு உடல் எடையை குறைத்து, மெலிந்து, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவ்வாறு நகுல் நடித்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.இந்த நிலையில், நகுல் நடித்திருக்கும் புதிய படம் ‘வாஸ்கோடகாமா’ விரைவில் வெளிவரவுள்ளது. ஆர்ஜிகே இயக்கிய இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகியுள்ளன. ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘உறியடி’, ‘உறியடி 2’, ‘ஃபைட் கிளப்’ போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.