Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தெலுங்கில் மோதும் ‘மதகஜராஜா’ ‘நேசிப்பாயா’ திரைப்படங்கள்… வரவேற்பைப் பெறுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2025ஆம் ஆண்டின் பொங்கல் திருநாளுக்கு தமிழ் சினிமாவில் மூன்று வேறு நாட்களில் படங்கள் வெளியானது. மொத்தமாக ஆறு படங்கள் வெளியான நிலையில், ஜனவரி 12ம் தேதி ‘மத கஜ ராஜா’ மற்றும் ஜனவரி 14ம் தேதி ‘நேசிப்பாயா’ போன்ற முக்கிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் ‘மத கஜ ராஜா’ மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்ததுடன், லாபமான படமாக அமைந்தது.

தற்போது ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘நேசிப்பாயா’ ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன. ‘நேசிப்பாயா’ படம் ‘பிரேமிஸ்தாவா’ என்ற பெயரில் ஜனவரி 30ம் தேதியும், ‘மத கஜ ராஜா’ அதே பெயரில் ஜனவரி 31ம் தேதியும் வெளியாகிறது.

விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் தெலுங்கு ரசிகர்களிடத்திலும் பிரபலமானவர்கள் என்பதால், தமிழில் கிடைத்த வரவேற்பு போல தெலுங்கிலும் ‘மத கஜ ராஜா’ பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நேசிப்பாயா’ புதிய நடிகர் ஆகாஷ் முரளி நடித்த படமாகும். இப்படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன், இவர் பவன் கல்யாணின் ‘பாஞ்சா’ படத்தை இயக்கியவர்.’நேசிப்பாயா’ தெலுங்கு ரசிகர்களை கவரும் என்று நம்பப்படுகிறது,

- Advertisement -

Read more

Local News