Wednesday, December 18, 2024

தீவிர வொர்க் அவுட் மூலம் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரேஷ்மா பசுபலேட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்தில் அவர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதன் பிறகு, பல திரைப்படங்களில் நடித்து வந்த ரேஷ்மா, சின்னத்திரையிலும் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக, பாக்கியலட்சுமி மற்றும் தீபம் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், உடல் எடையை ரேஷ்மா, தற்போது 12 கிலோ எடை குறைத்திருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், சில பிரச்சனைகளின் விளைவாக எனது உடல் எடை அதிகரித்து விட்டது.

இதனால், கடந்த 9 மாதங்களாக உணவைக் கட்டுப்படுத்தி, ஜிம்மில் தீவிரமான ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு, தற்போது 12 கிலோ எடையை குறைத்துள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News