சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டீசல்’. இதில் கருணாஸ், சாய் குமார், அனன்யா, வினய் ராய், தங்கதுரை, ரமேஷ் திலக், தீனா, விவேக் பிரசன்னா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை தெர்ட் ஐ புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்.பி.புரொடக்ஷன்ஸ் என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000061687-1-1024x537.jpg)
இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக அமைந்துள்ளது. இதற்காக படக்குழு தற்போது சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்க, இவ்வருட தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி ‘டீசல்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதே தேதியில், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகவுள்ளன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000061688-1-655x1024.jpg)