மணிரத்னம் இயக்கிய “காற்று வெளியிடை” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். பின்னர் அவர் “இவன் தந்திரன்”, “விக்ரம் வேதா”, “நேர்கொண்ட பார்வை”, “ரிச்சி”, “மாறா” உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் தாய்லாந்து சுற்றுலா சென்ற அவர், அங்கிருந்து நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இதுவரை எந்தப் படத்திலும் நீச்சல் உடை அணிந்து நடிக்காத ஷ்ரத்தா ஸ்ரீநாத், முதன்முறையாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.