மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “வாழை” படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் தனது வாழ்த்தை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், “மாரி செல்வராஜ் அவர்களின் ‘வாழை’ படத்தை பார்த்தேன். இது ஒரு அற்புதமான தரமான படமாகத் தமிழ் சினிமாவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார். அந்தப் பையன் அனுபவிக்கும் துன்பங்களையும் கஷ்டங்களையும் நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு வருகிறது.
கிளைமாக்ஸில், அந்த பையன் பசியால் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு கூட சாப்பிடவிடவில்லை என்று கதறும்போது, நமது மனமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தனது தலைசிறந்த இயக்குனர்தன்மையை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்,” என்று அந்த வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.