Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

தனுஷ் இயக்கியுள்ள #NEEK படத்தின் ரிலீஸ் எப்போது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ராயன்’ படத்தை இயக்கிய தனுஷ், தனது அடுத்த படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சுருக்கமாக ‛நீக்’ என அழைக்கின்றனர். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார்.

அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றன.

சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து வெளியான ‘கோல்டன் ஸ்பெரோ’ என்ற பாடல் தற்போது வைரலாக பரவி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பிற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தை வரும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News