Tuesday, November 19, 2024

தனது மகள் திருமணத்தை எண்ணி நெகிழ்ந்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்… வைரலாகும் பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் பன்முக திறமை கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் கடந்த ஆண்டு விஜய் நடித்த லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவருடைய நடிப்ப மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 10ஆம் தேதி அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமையா மகன் உமாபதி ஆகியோரின் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், விஷால் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தனது மகள் திருமணம் குறித்து திருமண வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அர்ஜுன் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தன் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தனது மகளுக்கும் தன் விருப்பத்திற்குரிய உமாபதிக்கும் நடந்த இந்த திருமணம் மறக்க முடியாத அன்பையும் சந்தோஷத்தையும் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் பயணம் மிகவும் அழகாக, அன்பு நிரம்பியதாக அமையும் என்று பேசிய அவர் அவர்கள் இருவரையும் அம்மா, அப்பா மற்றும் அஞ்சனா ஆகியோர் நேசிக்கின்றனர் என்றும் நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். அவரது மகளின் திருமணத்துக்கான இந்த நெகிழ்ச்சியான பதிவு ரசிகர்களையும் சக நடிகர்களையும் கவர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News