Saturday, September 14, 2024

தங்கலான் படத்தோடு ரேஸ்க்கு வரும் அந்தகன் திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த், தெலுங்கில் “வினய விதய ராமா” படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் “அந்தகன்” என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில், தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதே தேதியில் தான் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் “தங்கலான்” திரைப்படமும் வெளியாகவுள்ளது.

“அந்தகன்” பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ப்ளாக்பஸ்டர் ஹிட்டான “அந்தாதூன்” படத்தின் ரீமேக் ஆகும். மேலும் “அந்தகன்” திரைப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News