நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார், தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக ‘தேவரா’ உருவாகி வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள ஒரு பான் இந்தியா படமாக இருக்க, செப்டம்பர் 27ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.அதே சமயம் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.

இந்த சூழலில், மும்பையில் நடைபெறும் இந்தப் பிரமோஷன் நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் கலந்து கொண்டுள்ளார். இதன் போது, அவர் படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆரையும் சந்தித்து பேசினார்.

இதற்கு பிறகு, பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படத்தின் பின், அவர் ஜூனியர் என்டிஆரை இயக்குவாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை உறுதிப்படுத்தும் வகையில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.