Thursday, January 16, 2025

சைந்தவியுடன் தொடர்ந்து பணியாற்றுவது ஏன்? மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் கல்வி காலத்திலிருந்தே காதலித்து வந்தனர். 2013ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர் ஒரு மகளுக்கு பெற்றோரானார்கள். ஆனால் திடீரென, கருத்து வேறுபாடுகளின் காரணமாக, விவாகரத்து செய்ய முடிவு செய்ததுடன், அதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்

திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த பிறகும், சைந்தவி தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், அவர் இசையமைத்த பாடல்களுக்கு பின்னணி பாடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து, ஜி.வி.பிரகாஷிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, “நாங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தாலும், ஒருவருக்கொருவர் மீது உள்ள மரியாதை குறையவில்லை. அதனால் தொழில் ரீதியாக இணைந்து பணியாற்றுகிறோம், இது எப்போதும் போல தொடர்ந்து நடைபெறும்,” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News