Saturday, September 14, 2024

சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் படைத்த சாதனை… #KANGUVA

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள ‘கங்குவா’ படம் உருவாகி வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.

அந்த டிரைலர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே வீடியோ லிங்கில் தேர்வு செய்து பார்க்கும் வசதியுடன் வழங்கப்பட்டது. அதிக அளவிலான விஎப்எக்ஸ் காட்சிகளுடன், பிரம்மாண்டமான காட்சிகளுடன் கொண்ட டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேற்று மதியம் 1 மணிக்கு வெளியான இந்த டிரைலர், தற்போது 16 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சூர்யா நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் இது புதிய சாதனையாக அமைந்துள்ளது. அதற்கு முன்பு, ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்தது, அது அவரது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ‘கங்குவா’ டிரைலர் முறியடித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News