வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தளபதி 69 படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இந்த படம் தான் அவரது இறுதி படமென சொல்லிவுள்ள நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. இதனிடையே அடுத்ததாக தளபதி 69 படத்தின் அறிவிப்பை விஜய் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தை பிரபல பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
ஹெச் வினோத்துடன் தீரன் மற்றும் விஜய்யின் மாஸ்டர் படங்களில் இணைந்து பணியாற்றிய சத்யன் சூரியன், தளபதி 69 படத்தில் கேமரா மேனாக இணையுள்ளதாக கூறப்படுகிறது. தீரன் மற்றும் மாஸ்டர் படங்கள் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் பாராட்டுகள் பெற்றது.அடுத்ததாக சத்யன் சூரியன் தளபதி 69 படத்தின் இணையவுள்ள தகவல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.