Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சீதா ராமம் படத்தில் நீக்கப்பட்ட ராஷ்மிகா காட்சி இணையத்தில் வைரல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் 2022-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. 1964-ம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது.

காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் ராணுவ அதிகாரி முகவரி இல்லாமல் தனக்கு வரும் காதல் கடிதங்களை படித்து, அதை அனுப்பிய பெண்ணை கண்டுபிடிக்கிறார். அவளுடன் இணைந்து வாழ முடிந்ததா என்பதை உணர்ச்சிமிகுந்த கதையாக எடுத்து இருந்தனர். காதல் கடிதத்தை அனுப்பும் பெண்ணாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இதில் ராஷ்மிகா மந்தனா அப்ரீன் அலி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நீக்கப்பட்ட ராஷ்மிகாவின் நிமிட காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு கல்லூரிக்குள் காரில் செல்லும் ராஷ்மிகா, அங்கு ஒரு பெண்ணிடம் பேசுகிறார். பின்னர் அவர் வெளியே வந்து கார் டிரைவரின் நேர்மையை சந்தேகிக்கிறார். இவ்வாறு உள்ள இந்த வீடியோ வெளிவந்து ஒரு வருடம் ஆகிருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News