விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000051366-edited.jpg)
அப்போது இப்படத்திற்காக சிலம்ப பயிற்சி எடுத்து சண்டை காட்சியில் நடித்து உள்ள மாளவிகா மோகனன் மேடைக்கு வந்தபோது, இந்த மேடையில் நீங்கள் யாருடன் சிலம்ப சண்டை போட விரும்புகிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு தங்கலான் என்று பதில் கொடுத்தார் மாளவிகா மோகனன். ஆனால் அதற்கு விக்ரம் மறுத்துவிட்டார்.
அதையடுத்து இப்படத்தில் நடித்துள்ள இன்னொரு நடிகையான பார்வதியை மேடைக்கு அழைத்து மாளவிகாவுடன் கம்பு சுற்ற வைத்தார்கள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் சிலம்பக் கம்புகளை கையில் பிடித்தபடி சுழற்றிக் கொண்டிருந்தார்கள்.